உள்நாடு

உடனடியாக நடைமுறைக்கு வரும் குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நியமனம்

குடிவரவு குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகமாக பீ.எம்.டீ.நிலூசா பாலசூரியவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இது குறித்த அமைச்சரவை தீர்மானம் பின்வருமாறு…

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில்கடமை நியமனம்

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதியாகப் பணியாற்றிய ஐ.எஸ்.எச்.ஜே.இலுக்பிட்டிய அவர்கள் 2024.09.25 ஆம் திகதி தொடக்கம் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் தடுப்புக் காவலில் இருப்பதால், குறித்த பதவியில் பணிகளை நிறைவேற்றுவதற்கு உடனடியாக பொருத்தமான அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டியுள்ளது.

அதற்கமைய, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக தற்போது கடமையாற்றி வருகின்ற இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர உத்தியோகத்தரான பீ.எம்.டீ.நிலூசா பாலசூரிய அவர்களை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டு தலைமையதிபதி பதவிக்கு பதில் கடமைக்கு நியமிப்பதற்காக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related posts

கத்தார் உலக கோப்பை தொடக்க விழாவில் மனங்களைக் கவர்ந்த இளைஞர் யார்?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்று முக்கிய மாநாடு!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தாமரை கோபுரத்தை பார்வையிடுவதற்கான நேரம் நீடிப்பு

editor