அரசியல்உள்நாடு

உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

(UTV | கொழும்பு) –   உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும் – கர்தினால் மெல்கம் ரஞ்சித்

நாட்டில் உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டுமென கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை கோரிக்கை வைத்துள்ளார்.

 

மக்களால் புதிய அரசாங்கமொன்றை தெரிவு செய்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமெனவும்,

கந்தான புனித அந்தோனியார் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

 

அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டை நேசிக்காத தலைவர்களை கொண்டு நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது.

 

நாட்டின் எதிர்காலத்தை பற்றி சிந்திக்காது தங்களது இருப்பினை பற்றி மட்டும் சிந்திக்கும் அரசியல்வாதிகளுடன் பயணித்தால் நமக்கு எதிர்காலம் இருக்காது.

தேர்தலை நடத்துமாறு கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்க முடியும்.

 

தற்போது மக்களின் உரிமைகளை முடக்கக்கூடிய சட்டங்களே நிறைவேற்றப்படுகின்றன என சுட்டிக்காட்டியுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பில்

அளுத்கம- மொரகல கடலில் நீராடச் சென்ற மாணவர்களில் ஒருவர் மாயம்

‘ஒமிக்ரோன் உள்நுழைய இடமளியோம்’