உலகம்

உக்ரைன் இராணுவ விமானம் விபத்து – 25 பேர் பலி

(UTV | உக்ரைன் ) – உக்ரைன் நாட்டில் விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உக்ரைன் நாட்டின் இராணுவ விமானம் ஒன்றில் 25-க்கும் மேற்பட்டோர் நேற்று பயணம் செய்து கொண்டிருந்தபோது, இராணுவ விமான தளத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் விமானம் கீழே விழுந்து நொறுங்கி விபத்திற்குள்ளாகியது.

இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

‘டெல்டா’ வகை கொரோனா 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்

பிகார், உத்தரப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 107 பேர் உயிரிழப்பு

ஹமாஸ் அமைப்பின் நிதி அமைச்சர் சுட்டுக் கொலை!