உலகம்

உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்

(UTV |  கீவ்) – உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ளதால் உக்ரைனுக்கு பெரும்பாலான நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வி‌ஷயத்தில் ரஷியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான நாடுகள் ரஷியாவுக்கு பொருளாதார தடை விதித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, ருமேனியா, நெதர்லாந்து, டென்மார்க் செக்குடியரசு மற்றும் அமெரிக்கா, கனடா, இஸ்ரேல் ஆகியவை ராணுவ உதவிகளை உக்ரைனுக்கு அளித்துள்ளன.

இந்த நிலையில் ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள 3 நாடுகள் 70 போர் விமானங்களை உக்ரைனுக்கு வழங்குகின்றன.

உக்ரைனுக்கு 70 போர் விமானங்களை அனுப்புகிறது ஐரோப்பிய நாடுகள்

பல்கேரியா-30, போலந்து -28, சுலோவாக்கியா-12 ஆகிய 3 நாடுகள் 70 போர் விமானங்களை வழங்க உள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேபோல் உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவதாக ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.

Related posts

டொனால்ட் டிரம்ப்பை கைது செய்ய உத்தரவிட்ட ஈரான்

காசாவின் அல்ஸிபா மருத்துவமனை- புதிதாக பிறந்த குழந்தைகள் உயிரிழக்கும் ஆபத்து.

இஸ்ரேல் – ஐக்கிய அரபு இராஜ்ஜியம் புதிய வரலாற்றுப்பூர்வ ஒப்பந்தம்