வகைப்படுத்தப்படாத

உக்ரைனில் சுட்டுக்கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ரஷிய பத்திரிகையாளர் பத்திரமாக உள்ளார்

(UTV|RUSSIA)-ரஷியாவை சேர்ந்த பிரபல பத்திரிக்கையாளர், ஆர்கடி பாப்சென்கோ. இவர் ரஷியாவில் இருந்து உயிருக்கு பயந்து வெளியேறி உக்ரைன் நாட்டில் தஞ்சம் அடைந்தார்.

இதனிடையே, அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வைத்து சில மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. பத்திரிக்கையில் செய்தி வெளியிவதில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்பட்டது. அவர் கொல்லப்பட்டதற்கு ரஷியா தான் காரணம் எனவும் கூறப்பட்டது.
இந்நிலையில், அவர் தற்போது பத்திரமாக இருப்பதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. பாப்சென்கோவை கொலை செய்ய போடப்பட்ட திட்டத்தை முன்கூட்டியே தெரிந்துகொண்ட உக்ரைன் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவரை காப்பாற்றியுள்ளனர். உயிரை காப்பாற்றிய உக்ரைன் அதிகாரிகளுக்கு பாப்சென்கோ நன்றி தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

அரச ஊழியர்களுக்கு பயிற்சிகளை வழங்க மலேசிய அரசாங்கம் பூரண ஆதரவு

Israel demolishes homes under Palestinian control

புறக்கோட்டை ஆடையகம் ஒன்றில் தீடீர் தீப்பரவல்