உலகம்

‘உக்ரைனில் இருந்து ரஷியா வரும் மக்களுக்கு நிதியுதவி’

(UTV |  மாஸ்கோ) – உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 6 மாதங்களைக் கடந்தும் சண்டை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைனில் இருந்து ரஷியாவிற்கு வரும் மக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பிறப்பித்துள்ளார். பொதுமக்களுக்கு நிதியுதவி வழங்கும் ஆணையில் இன்று அவர் கையெழுத்திட்டார்.

ஓய்வூதியம் பெறுவோர், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட உக்ரைனை விட்டு ரஷியாவிற்கு வரும் அனைவருக்கும் நிதியுதவி வழங்கப்படும். கடந்த பிப்ரவரி 18 முதல் உக்ரைன் பிரதேசத்தை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ள மக்களுக்கு 10,000 ரூபிள் மாதாந்திர ஓய்வூதியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு உக்ரைனில் பிப்ரவரியில் ரஷியாவால் சுதந்திர பிராந்தியங்களாக அங்கீகரிக்கப்பட்ட ரஷிய ஆதரவு பிராந்தியங்களான சுய ஆட்சி நடைபெறும் டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதியிலிருந்து வருவோருக்கும் நிதியுதவி வழங்கப்படும். ஏற்கனவே, உக்ரைன் மக்களுக்கு ரஷிய பாஸ்போர்ட்டுகளை ரஷியா வழங்கி வருகிறது.

Related posts

உக்ரைன் உடனான போரை வழி நடத்த புதிய ராணுவ தளபதி

செவ்வாய்க்கி ஹெலி

வட கொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம்