உலகம்

உக்ரைனில் அவசர நிலை : பல்முனை தாக்குதலை தொடங்கியது ரஷ்யா

(UTV |  உக்ரைன்) – ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இராணுவ நடவடிக்கையை தொடங்குவதாக புதின் அறிவித்திருந்த நிலையில் உக்ரைன் மீது உடனடி தாக்குதல் நடத்தப்பட்டது. தலைநகர் கியூவின் பல்வேறு பகுதிகளில் ரஷ்யா படைகள் தாக்குதல் நடத்தினர். உக்ரைனின் 2-வது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் மீதும் தாக்குதல் துவங்கியது.

ஆயுதங்களை கீழே போட்டு விட்டு வீடுகளுக்கு செல்லுங்கள் என உக்ரைன் படைகளுக்கு புதின் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையில் யார் தலையிட்டாலும் பதிலடி கொடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் ரஷ்யாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியதாவது;

“ரஷ்யா தாக்குதல் நடத்துவது ஆக்கிரமிப்பு போர். ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போரில் இருந்து உக்ரைன் தன்னை தற்காத்து கொள்ளும்” என அவர் கூறினார்.

ரஷ்யா பாராளுமன்றத்தில் நேற்று உக்ரைனில் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக படைகளை பயன்படுத்த புதினுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேவேளையில், உக்ரைன் கிழக்குப் பகுதியில் உள்ள இரண்டு நகரங்களை அங்கீகரித்துள்ளது ரஷ்யா.

உக்ரைனுக்கு படைகளை அனுப்ப புதினுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உக்ரைன் எல்லையையொட்டி ரஷ்யா போர்ப்படைகள் நகர்ந்து வருகின்றன. உக்ரைன் எல்லையில் இருந்து வெறும் 20 கி.மீட்டர் தொலைவில்தான் ரஷ்யா படைகள் முகாமிட்டுள்ளது. இது செயற்கைக்கோள் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனால் எந்த நேரத்திலும் ரஷ்யா போர் தொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் உக்ரைன் நாடு தழுவிய அவசர நிலை பிரகடனம் அறிவித்துள்ளது.

உக்ரைன் நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரி உக்ரைன் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளது. டொனஸ்க் மற்றும் லஹான்ஸ் மாகாணங்களை தவிர்த்து இது நாடு முழுவதும் அடங்கும். இந்த உத்தரவு 30 நாட்கள் அமலில் இருக்கும். அதன்பின் நீடிக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே உக்ரைன் பாதுகாப்பு கவுன்சில் அவசர பிரகடனம் அறிவிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

Related posts

ஐக்கிய இராஜ்ஜியம் வரலாற்றின் புதிய அத்தியாயத்தில்

உலகை அச்சுறுத்தும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 40 இலட்சத்தை தாண்டியது

லண்டனில் யூதர்களுக்கு ஆதரவாக 1 இலட்சம் பேர் பேரணி!