உள்நாடு

ஈரான் பாதுகாப்பு புலனாய்வு இலங்கைக்குள்…!

போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரானின் தலைவர் இலங்கைக்கு வருகைத் தரவுள்ள நிலையில்,  அந்த நாட்டினுடைய வெவ்வேறு பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த நான்கு அணியினர் இலங்கைக்கு வருகைத் தந்துள்ளனர் என புலனாய்வுச் செய்தியாளர்  எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்தார்.

இலங்கை வந்துள்ள குறித்த பாதுகாப்பு குழுவினர் நாட்டின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமால் குணரத்னவை சந்தித்து கலந்துரையாடிள்ளனர் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நாட்டில் தற்போது விடுதலைப் புலிகள் இல்லாத காரணத்தினால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்ட நிலையில் காணப்படுவதாகவும் நிலாம்டீன் தெரிவித்தார்.

லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். (லங்காஶ்ரீ)

Related posts

ஆர்ப்பாட்டம் காரணமாக முடங்கியது போக்குவரத்து

உகன மற்றும் தமன பிரதேசங்களுக்கான ஊரடங்குச் சட்டம் நீக்கம்

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது