உலகம்

ஈரானிய அணு விஞ்ஞானி படுகொலை

(UTV | ஈரான் ) –  ஈரானின் அணுசக்தி திட்டத்தின் தலைமை விஞ்ஞானி மொஹ்சென் ஃபக்ரிஸாதே படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்துள்ள இரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஸரீஃப், இது ஒரு நாட்டின் ஆதரவுடன் நடந்த தீவிரவாத செயல் என்று தெரிவித்துள்ளார்.

மொஹ்சென் பக்ரிசாதே ஈரான் தலைநகர் தெஹ்ரான் அருகில் காரில் பயணித்த போது அவரது கார் வெடிகுண்டு மூலம் குறிவைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதில் படுகாயம் அடைந்த நிலையில் பக்ரிசாதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்பு உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

மொஹ்சென் ஃபக்ரிஸாதேவை, “ஈரானிய வெடிகுண்டு உலகின் தந்தை” என்று ராஜீய அதிகாரிகள் அழைப்பதாகவும் கூறப்படுகிறது.

மே 2018 இல் ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அளித்த விளக்கத்தில் பக்ரிசாதேவின் பெயர் முக்கிய விஞ்ஞானியாக பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஜெர்மன் துப்பாக்கி சூட்டில் 6 பேர் பலி

இந்திய இராணுவ முக்கிய அதிகாரிகள் பயணித்த ஹெலி விபத்து

சீனா – சுமார் 600 விமான சேவைகள் இடைநிறுத்தம்