சூடான செய்திகள் 1

இ.போ.ச தொழிற்சங்கங்கள் சில பணிபுறக்கணிப்பில்

(UTV|COLOMBO) இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் சில இணைந்து தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபையின் தலைவருக்கு அரசியல் ரீதியான அழுத்தங்கள் முன்வைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வேலை நிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மதியம் 12 மணியிலிருந்து தமது சேவைகளிலிருந்து விலகி உள்ளதாக சில தொழிற்சங்கங்கள் தமக்கு எழுத்து மூலமாக அறிவித்துள்ளதாக குறித்த சபையின் போக்குவரத்து பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக பேரூந்து சேவையில் பாதிப்பு நிலவி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஆராய ஐவர் கொண்ட ஆணைக்குழு நியமனம்

மழையுடன் கூடிய வானிலை மேலும் அதிகரிக்கும்

நீரில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவன் பலி…