அரசியல்உள்நாடு

இ.தொ.கா யானை சின்னத்தில் போட்டியிடும்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் யானை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்துள்ளதாக இ.தொ.கா தெரிவித்துள்ளது.

மேலும் இ.தொ.கா வின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், தவிசாளர் மருதபாண்டி ராமேஸ்வரன், தேசிய அமைப்பாளர் சக்திவேல் ஆகியோர் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளனர்.

எனவே பாராளுமன்ற தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து, மலையகத்தின் மாபெரும் கட்சியான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் எந்த கூட்டணியில் மற்றும் எந்த சின்னத்தில், எத்தனை வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர் என பல்வேறு தரப்பினரால் கருத்தாடல்கள் இடம்பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் (08) இறுதி முடிவை இ.தொ.கா உயர்பீடம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏனைய மாவட்டங்களில் சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடவுள்ளது

Related posts

தம்மிக்க பெரேரா இன்னும் இரு வாரங்களில் வரைபடத்தை சமர்ப்பிக்க உள்ளார்

IMF ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைக்காக அலி சப்ரி பயணம்

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்காக புதிய நிறுவனம்