உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : பலியானோர் எண்ணிக்கை 4,200 ஆக அதிகரிப்பு.

(UTV | கொழும்பு) –

கடந்த சனிக்கிழமையிலிருந்து இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,200 ஆக உயர்வடைந்துள்ளது. தங்கள் நாட்டில் ஹமாஸ் போராளிகள் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,300 ஆக கடந்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்தி வரும் வான்வழித் தாக்குதலில் இதுவரை 1,417 பேர் உயிரிழந்ததாக பிராந்திய சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன், இஸ்ரேல் தாக்குதல் காரணமாக மேற்குக் கரையில் 28 பேரும், லெபனானில் 6 பேரும் கொல்லப்பட்டர். இது தவிர, தங்கள் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்திய 1,500 ஹமாஸ் போராளிகள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஏற்கெனவே தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் 447 சிறுவர்களும், 248 பெண்களும் அடங்குவர் என அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பதவியை இராஜினாமா செய்தார் மகாதீர் மொஹமட்

புதிதாக பரவும் ‘Monkey Pox’

கொரோனா : குணமடைந்தோர் எண்ணிக்கை 87 இலட்சத்தை கடந்தது