உள்நாடு

இஸ்ரேல் தான் எங்களின் முதல் இலக்கு – ஹமாஸ் அமைப்பின் கமாண்டர்.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல்-காசா மோதல் நீடித்து வரும் நிலையில் ஹமாஸ் அமைப்பின் கமாண்டர் மஹ்மத் அல் ஜஹார் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அவர் பேசியிருப்பதாவது:-
இஸ்ரேல் தான் எங்களின் ஆரம்ப இலக்கு. உலகம் முழுவதும் எங்கள் செல்வாக்கை விரிவுபடுத்துவதே எங்களின் நோக்கம். முழு பிரபஞ்சமும் எங்கள் சட்டத்தின் கீழ் இருக்கும். லெபனான், சிரியாவில் உள்ள அனைத்து அரபு நாடுகளின் பலஸ்தீனியர்கள் மற்றும் அரேபியர்களுக்கு எதிராக அநீதி, அடக்குமுறை மற்றும் கொலைகள், குற்றங்கள் இல்லாத 510 மில்லியன் சதுர கிலோ மீற்றர் கொண்ட நிலப்பரப்பு ஒரு அமைப்பின் கீழ் வரும். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே இஸ்ரேலிய வீரர்கள் மற்றும் பொதுமக்களை பணயக் கைதிகளாக வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பினர் காசாவில் உள்ள ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு பணயக் கைதியை அனுப்பி அவர்களை தூக்கிலிட போவதாகவும் அச்சுறுத்தி உள்ளனர். ஆனால் இதற்கான எந்த அறிகுறியும் இல்லை எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

யூரியா உரத்தின் விலை குறைவு

வாக்குச்சீட்டை கிழித்த இளைஞர் கைது

editor

வைத்தியர் முகைதீன் கொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை விதித்த நீதிபதி இளஞசெழியன்