உலகம்

இஸ்ரேல் காசாவை ஆட்சி செய்ய எண்ணவில்லை – பெஞ்சமின் நெட்டன்யாகு.

(UTV | கொழும்பு) –

இஸ்ரேல் காசாவை ஆக்கிரமிக்கவோ அல்லது கைப்பற்றவோ ஆட்சிபுரியவோ நினைக்கவில்லை என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டனயாகு தெரிவித்துள்ளார். எனினும் ஹமாசை தோற்கடித்த பின்னர் காசாவிலிருந்து தீவிரவாத அச்சுறுத்தல்கள் எழுவதை தடுப்பதற்காக காசாவிற்குள் படையணியொன்று நுழைவது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிவில் நிர்வாகமொன்று அவசியம் என குறிப்பிட்டுள்ள அவர் ஒக்டோபர் ஏழு தாக்குதல் போன்ற ஒன்று இடம்பெறாததை மீண்டும் உறுதி செய்யவேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார். காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலே பொறுப்பு என இஸ்ரேல் பிரதமரின் கருத்திற்கு அமெரிக்கா கடும் கண்டனம் வெளியிட்டுள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு பொக்ஸ் நியுசிற்கு தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

காசாவின் பாதுகாப்பிற்கு இஸ்ரேலிய படையினரே பொறுப்பு – பெஞ்சமின் நெட்டன்யாகு.

2025 புத்தாண்டு மலர்ந்த முதலாவது நாடு – கோலாகலமாக வரவேற்ற மக்கள்

editor

ஓமான் கடலில் கப்பல் மூழ்கியதில் காணாமல் போன 9 பேர் மீட்பு