உலகம்

இஸ்ரேல்- ஈரான் தாக்குதலை கண்டிக்கும் அமெரிக்காவின் MP

இஸ்ரேல்(Israel) மீது ஈரானிய(Iran) இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் சிரியாவில்(Syria) உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ தாக்குதலை தாம் கண்டிப்பதாக அமெரிக்காவின் முதல் முஸ்லிம் பெண் நாடாளுமன்ற உறுப்பினரான இல்ஹானா உமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இஸ்ரேல் மீதான ஈரானின் தாக்குதல் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இஸ்ரேல் மீது ஈரானிய இராணுவத்தின் தாக்குதல்கள் மற்றும் சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீதான இஸ்ரேலின் இராணுவ தாக்குதலை நான் கண்டிக்கிறேன்.

இது பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கிறது. தாக்குதலில் எந்த உயிரிழப்பும் ஏற்படாததற்கு நான் இறைவனை பிராதிக்கின்றேன்.

தாக்குதலில் படுகாயமடைந்த சிறுவர்கள் முழுமையாக குணமடைய அமெரிக்க தலைவர்கள் ஈரானுடன் போருக்கு அழைப்பு விடுக்க, இஸ்ரேலிய இராணுவத்திற்கு கூடுதல் தாக்குதல் ஆயுதங்களை வழங்க, நாங்கள் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும்.

மேலும், காசா, இஸ்ரேல், மேற்குக் கரை மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் உள்ள குடிமக்கள் மட்டுமின்றி, லெபனான், சிரியா, ஈராக் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் உள்ள பதட்டங்களைத் தணிக்க ஒவ்வொரு ராஜதந்திரக் கருவியையும் அமெரிக்கா பயன்படுத்த வேண்டும்.

இந்நிலையில் அமைதிக்கான வழியை ஏற்படுத்தல், கட்டுப்பாடு மற்றும் நீடித்த அமைதிக்கு நான் தொடர்ந்து அழைப்பு விடுக்கும் செயற்பாட்டில் நான் ஈடுபடுவேன்.” என்றார்.

Related posts

சூடான் பிரதமர் பதவி இராஜினாமா

15 நிமிடங்களில் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன Human Washing Machine

editor

கொரோனாவுக்கு மத்தியில் ‘மோலேவ்’ புயல் – 9 பேர் பலி