அகம் பேர்கெர் என்ற இஸ்ரேலிய பணயக்கைதியை ஹமாஸ் அமைப்பு செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்துள்ளது.
அவர் தற்போது இஸ்ரேலிய இராணுவத்தினரின் பகுதியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்றார்.
பேர்கெரை பொதுமக்களிற்கு காண்பித்த பின்னர் ஹமாஸ் அமைப்பினர் அவரை செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைத்தனர்.
மேலும் ஏழு கைதிகளை ஹமாஸ் இன்று விடுதலை செய்யவுள்ளது.
ஹமாசினால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டவேளை பேர்கெர் பெண்களை மாத்திரம் உறுப்பினர்களாக கொண்ட இஸ்ரேலிய இராணுவ படைப்பிரிவொன்றில் பணியாற்றினார்.
டாட்ஸ்பிடானியோட் என்ற இந்த படைப்பிரிவின் ஏழு உறுப்பினர்கள் காசாவை கண்காணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவேளை ஹமாசினால் பிடிக்கப்பட்டனர்.
இவர்களில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றுமொரு பெண் இராணுவவீராங்கனை உயிருடன் மீட்கப்பட்டார்.நால்வர் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.