உலகம்

இஸ்ரேலின் தாக்குதலில் பெற்றோரும் சகோதரனும் பலி – காசாவில் இடிபாடுகளிற்குள் இருந்து 25 நாள் பெண் குழந்தை உயிருடன் மீட்பு

காசாவில் கான் யூனிஸ் பகுதியில் சில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் உயிர்பிழைத்த 25 நாள் பெண் குழந்தையை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்டுள்ளனர்.

பெற்றோர் இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்துவிட்டனர்.

இஸ்ரேலின் தாக்குதலால் தொடர்மாடியொன்று முற்றாக சிதைவடைந்துள்ள நிலையில் மீட்பு பணியாளர்களிற்கு நம்பிக்கை ஒளியொன்று தென்பட்டது, குழந்தையொன்றின் மிக மெல்லிய அழுகையே அது.

திடீரேன இடிபாடுகளின் மத்தியிலிருந்து மீட்புபணியாளர் ஒருவர் குழந்தையொன்றை தாலாட்டியவாறு வெளியே வந்த போது ‘கடவுளே பெரியவன்’ என்ற குரல் எழுந்தது.

போர்வையால் போர்த்தப்பட்ட குழந்தையை காத்திருந்த அம்புலன்சிற்கு கொண்டு சென்றனர் , அங்கு துணை மருத்துவபிரிவினர் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

அவர்களது வீட்டை தரைமட்டமாக்கிய இஸ்ரேலின் தாக்குதலால் அந்த கைக் குழந்தையின் பெற்றோரும் சகோதரனும் கொல்லப்பட்டனர்.

நாங்கள் அங்கு காணப்பட்ட மக்களை கேட்டவேளை அந்த குழந்தை பிறந்து ஒரு மாதம். அதிகாலை குழந்தை இடிபாடுகளிற்குள்ளேயே இருந்தாள்.

அவள் அழுவாள் பிறகு மௌனமாகி விடுவாள், நாங்கள் அவளை மீட்கும் வரை இந்த நிலையே காணப்பட்டது கடவுளுக்கு நன்றி என குழந்தை மீட்கப்பட்ட தருணங்களை சிவில் பாதுகாப்பு பிரிவை சேர்ந்த ஹசென் அட்டர் தெரிவித்தார்.

Related posts

இரு நாடுகள் செல்வதற்கு இனி விசா தேவையில்லை!

மற்றுமொரு கொடிய நோய் குறித்து WHO எச்சரிக்கை

உக்ரைனுக்கான இராணுவ உதவிகளை நிறுத்த ட்ரம்ப் நிர்வாகம் ஆலோசனை

editor