உள்நாடு

இவ்வாரத்தினுள் துறைமுக செயற்பாடுகள் முழுமையாக வழமைக்கு

(UTV | கொழும்பு) –  துறைமுக நடவடிக்கைகள் வழமை நிலைமைக்கு திரும்பி கொண்டிருப்பதாக துறைமுக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த வாரத்திற்குள் கொழும்பு துறைமுகத்தில் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனபதை எம்மால் உறுதி செய்ய முடியும் என அதிகார சபையின் தலைவர் ஜெனரல் தயாரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கை துறைமுக அதிகார சபையின் தலைவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில்;

இலங்கை துறைமுக அதிகார சபை மற்றும் கடல் சார்ந்த கேந்திரத்துடன் தொடர்புப்பட்ட அனைத்து தரப்பினரும் புதிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இது மொத்தத்தில் சர்வதேச ரீதியில் எதிர்கொள்ளும் சவாலாகும். இதற்காக துறைமுகம் மற்றும் கடல் சார்ந்த தொழில்துறையுடன் தொடர்புபட்ட அனைவரதும் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் நேர்மையான அர்ப்பணிப்பு மற்றும் ஒற்றுமையாகுமென நான் உண்மையிலேயே நம்புகிறேன்.

இந்த ஆபத்தான வைரஸ் தொற்று காரணமாக உலகளாவிய விநியோகத்திற்கு பாரிய சவால் எதிர்நோக்கப்பட்டுள்ளது. இதன் பெறுபேறு என்ற ரீதியில் பெரும் எண்ணிக்கையிலான கொள்கலன் கப்பல்கள் மற்றும் ஏனைய கப்பல்களினால் உலகின் பெரும்பாலான துறை முகங்களுக்குள் பிரவேசிக்க முடியாதுள்ளது.

என்னால் இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டபடி இலங்கை இந்த நிலைமையின் கீழ் பொறுப்புக்களை கைவிடவில்லை. இதன் பெறுபேறு என்ற ரீதியில் எமது துறைமுகங்களில் கொள்கலன் கப்பல் , பயணிகள் கப்பல் பாரம்பரிய சரக்கு கல்பல்கள் மற்றும் ஏனைய கப்பல் சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. இதில் எமது ஊழியர்களை பரிமாறல் மற்றும் இந்நடவடிக்கைகளுக்காக அவர்களது சுகாதார நிலைமையை பாதுகாப்பதற்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

விசேடமாக உலகளாவிய விநியோகத்தில் உந்து சக்தி மாலுமிகள் என்பதை சரியாக புரிந்துகொண்டு அனைத்து சுகாதார பாதுகாப்பு முறைகளையும் கடைப்பிடிப்போம். எப்பொழுதும் நாம் முக்கியத்துவம் வழங்குவது அனைவரையும் முடிந்த வரையில் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான தேவையான நடவடிக்கைகளுக்காகும்.

கொழும்பு துறைமுகம் மற்றும் ஏனைய முனையங்களில் உள்ள ஊழியர்களுக்கு கொவிட் – 19 வைரஸ் தொற்று ஏற்பட்டமை நீங்கள் அனைவரும் அறிந்த விடயமாகும். இது கொழும்பு துறைமுகத்தில் செயற்பாட்டு நடவடிக்கைகளுக்கு ஓரளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும்,இவ்வாறான குறுகிய தடைகளுக்கு தீர்வைக்கண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் அனைத்து துறைமுகங்களிலும் செயற்பாடுகள் மற்றும் ஏனைய சேவைகளை வழமை நிலைக்கு கொண்டு வர முடிந்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றினால் அனைத்து ஊழியர்களும் உடனடியாக வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த தொற்றுக்குள்ளானவர்கள் உடனடியாக அடையாளம் காணப்பட்டு முறையாக சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளை கடைப்பிடித்து முறையாக சுகாதார விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்களுக்கு உரிய வகையில் தனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை அடையாளம் காணப்படும் கொவிட் தொற்றுக்கு உள்ளான ஊழியர்கள் மற்றும் துறைமுகத்தை பயன்படுத்துவோரின் மாதிரிகள் பரிசோதனைக்காக தொடர்ச்சியாக சமர்பிக்கப்படுகின்றன. துறைமுக வளவில் அலுவல்களில் ஈடுப்படும் அனைவரும் தீவிரமான சுகாதார வழிகாட்டிகளை கடைப்பிடிக்ககூடிய அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கொவிட் – 19 தொற்றின் காரணமாக அனைத்து நபர்களுக்கும், சமூகத்திற்கும் ஏற்படும் அழுத்தத்தை குறைப்பதற்கான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொழும்பு துறைமுகத்தில் ஜயபாகு முனையங்களில் ஊழியர்களில் சுமார் 30 சதவீதமானோர் தொடர்ந்தும் தமது வீடுகளில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்தோடு துறைமுக வளவில் கொள்கலன் நடவடிக்கைக்காக பயிற்றுவிக்கப்பட்ட மனிதவளம் போதுமான அளவில் இல்லாததினால் மனித வளத்தை வழங்கும் நிறுவனத்தின் ஊடாக மேலதிக ஊழியர்களை இணைத்துக்கொண்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் துறைமுக நடவடிக்கைகள் வழமை நிலைமைக்கு திரும்பி கொண்டிருப்பதுடன் இந்த வாரத்திற்குள் கொழும்பு துறைமுகம் அதன் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனபதை எம்மால் உறுதி செய்ய முடியும் என்று தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாகிஸ்தான் எப்போதும் இலங்கைக்கு ஆதரவாக இருக்கும்

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு

நாடு திரும்பும் இலங்கையர்கள் அனுமதி பெறத் தேவை இல்லை