மத்திய மாகாணத்தின் கந்தேநுவர பகுதியில் காணாமல் போனதாகக் கூறப்படும் 16 வயது சிறுமியைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
டிசம்பர் 2024 முதல் காணாமல் போனதாகக் கூறப்படும் சிறுமியின் பாட்டி, கந்தேநெவர பொலிஸில் முறைப்பாடளித்திருந்தார்.
காணாமல் போன சிறுமியைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் 071 – 8592943 அல்லது 066 – 3060954 என்ற தொலைபேசி எண்கள் மூலம் காவல்துறையினரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.