கேளிக்கை

இளைய தளபதியை தொடர்ந்து உலக நாயகன்

(UTV | இந்தியா) –  மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ள படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ். கைதி படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய்யை வைத்து மாஸ்டர் படத்தை இயக்கி முடித்த நிலையில், ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் படம் இயக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது கமலை வைத்து அடுத்த படத்தை இயக்கும் பணிகளில் லோகேஷ் கனகராஜ் தீர்மானித்துள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலின் 232 வது படத்திற்கு ‘எவனென்று நினைத்தாய்’ என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். மேலும் இதன் போஸ்டர் ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Related posts

கைதாவாரா செளந்தர்யா ரஜினிகாந்த்?

அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…

கீர்த்தி சுரேஷ் இவருக்கு ஜோடியா?