சூடான செய்திகள் 1

இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை

(UTV|ANURADHAPURA)-கெகிராவை பிரதேசத்தில் பெண்ணொருவர் நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

கெகிராவை – இஹலகம பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய திருமணமான பெண்ணொருவரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

இவர் திருமணத்தின் பின்னர் கணவரின் வீட்டில் வசித்து வந்துள்ள நிலையில் , குறித்த வீட்டிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக காவற்துறை தெரிவித்தது.

தருசி காவிந்யா என்ற குறித்த பெண்ணின் பிரேத பரிசோதனை இன்றைய தினம் அனுராதபுரம் மருத்துவமனையில் இடம்பெறவுள்ளதாக கெகிராவை காவற்துறையினர் மேலும் தெரிவித்தனர்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் , குறித்த மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ரஞ்சித் சொய்சா எம்.பி க்கு விளக்கமறியல்

தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக மனுதாக்கல்

இன்றைய தினமும் அமைச்சர்கள் நியமனம்