சூடான செய்திகள் 1

இலஞ்சம் மற்றும் ஊழலை அழிப்பதற்கான ஐந்தாண்டு தேசிய செயற் திட்டம் இன்று அங்குரார்ப்பணம்

(UTV|COLOMBO) இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 5 ஆண்டுகளைக் கொண்ட 2019 ஆம் ஆண்டு முதல் 2023 ஆண்டுவரையான காலப்பகுதியை உள்ளடக்கி தேசிய செயற்பாட்டுத் திட்டம் இன்று கொழும்பில் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படவுள்ளது.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொள்ளும் இந்த நிகழ்வில், நாடுமுழுவதிலிருந்தும் சுமார் 1250 பேர் அழைக்கப்படவுள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம் மற்றும் 4 கையேடுகளும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இதன்படி, 15 புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி

ரஞ்சனின் குரல் பதிவுகள் தொடர்பில் CCD விசாரணைகள் ஆரம்பம்

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான விசாரணை மீண்டும் ஒத்திவைப்பு