விளையாட்டு

இலங்கை 6 ஓட்டங்களால் வெற்றி

(UTV|கொழும்பு) – இலங்கை – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெற்ற 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 307 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி குசல் மென்டிஸ் 55 ஓட்டங்களையும், தனஞ்சய டி சில்வா 51 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அதன் அடிப்படையில் இலங்கை அணி 3-0 என்ற ரீதியில் தொடரை கைப்பற்றியுள்ளது.

Related posts

32 அணிகளுடன் 2022 உலகக் கிண்ண உதைபந்தாட்டத் தொடர்?

அடுத்த வாரம் தேசிய கனிஷ்ட மெய்வாண்மை போட்டி ஆரம்பம்

நுவான் சொய்சா’வுக்கு ICC இனால் தடை