உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கை ஹலால் நிறுவனம்- தாய்லாந்து இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சி- டொலர் வருமானத்தை ஏற்படுத்த தீவிரம்

தாய்லாந்து தூதரகம் மற்றும் இலங்கை ஹலால் Halal Accreditation Council (HAC) இணைந்து இருதரப்பு வர்த்தக முயற்சிகள் மூலம் டொலர் வருமானத்தை ஏற்படுத்த முயற்சி

ஹலால் சான்றளிக்கப்பட்ட உற்பத்திகளை கொண்ட இருதரப்பு வர்த்தகம் தொடர்பான ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களை ஊக்குவிக்கும் பிரதான நோக்கத்துடன், தாய்லாந்து அரசாங்கம் 2023 ஓகஸ்ட் 16 முதல் 19 வரை இலங்கை வர்த்தக பிரதிநிதிகள் குழுவினருடான சந்திப்பு ஒன்றை முன்னெடுத்திருந்தது. ஏற்றுமதி அமெரிக்க டொலர் வருமானத்தை வலுப்படுத்துவதும் தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான வளர்ந்து வரும் உறவுகளை மேம்படுத்துவதையும் நோக்கமாக, இந்த முக்கிய விஜயம் அமைந்திருந்தது.

இக்குழுவில், தாய்லாந்து தூதரகம், இலங்கை ஹலால்  கவுன்சில் (HAC), John Keells Holdings, Pyramid Wilmar, Transtrade International, Benjarong, Pulses Splitting & Processing Industry ஆகிய முக்கிய நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தப்படுத்தி, 9 உறுப்பினர்களை உள்ளடக்கிய பிரதிநிதிகள் பங்குபற்றியிருந்தனர். இந்த கலந்துரையாடலில் நிறுவனங்களின் பிரதிநிதிகள் தங்களது நிபுணத்துவத்தையும் இவ்விடயம் தொடர்பான ஆர்வத்தையும் வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த தூதுக்குழுவினரின் விஜயத்தின் போது இடம்பெற்ற சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்கள், தாய்லாந்துக்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான புதிய கட்டத்தை நோக்கி, செல்ல வழிவகுத்துள்ளன. இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான (FTA) அனுமதி 2024 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இடம்பெறவுள்ளது. இதன் மூலம் இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பு மேலும் வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

தாய்லாந்து அரசாங்கமானது, தமது வருமானத்தை அதிகரிக்கவும், ஹலால் பொருட்கள் தொடர்பான சந்தையில் உலகளாவிய ரீதியில் மிகப் பலம் மிக்கதாக தன்னை நிலைநிறுத்தவும், அதன் ஹலால் தொழில்துறையை பயன்படுத்தியுள்ளது. அந்த வகையில், அதன் ஹலால் உணவு ஏற்றுமதியானது 2003 இல் டொலர் 247 மில்லியனிலிருந்து 2021/22 ஆம் ஆண்டுகளில் டொலர் 6.1 பில்லிய னாக பாரிய அளவில் உயர்ந்துள்ளது.

அத்துடன், ஹலால் உற்பத்திகளை ஏற்றுமதி செய்யும் உலகின் 15ஆவது பெரிய நாடாக தாய்லாந்து தனது நிலையை உயர்த்தியுள்ளது. தாய்லாந்தின் மத்திய இஸ்லாமிய கவுன்சில் (CICOT) ஆனது, 4,000 இற்கும் மேற்பட்ட உணவு மற்றும் பான உற்பத்தி தொழிற்சாலைகளுக்கான சான்றிதழை வழங்கியுள்ளதன் மூலம், பிரமிக்கும் வகையில் சுமார் 166,000 உற்பத்திகளை சந்தைக்கு வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிக போட்டி நிறைந்த உலகளாவிய ஹலால் சந்தையில் ஏற்றுமதியாளர்களை ஈடுபாட்டுடன் பங்குபற்றச் செய்யும் நோக்கத்துடன் இணைந்து செயற்படுவதே இலங்கை ஹலால் அங்கீகார கவுன்சிலின் (HAC) நோக்கமாகும். இலங்கையில், ஹலால் அங்கீகார கவுன்சிலானது, 240 இற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கு சான்றளித்துள்ளதன் மூலம், 8,000 மேற்பட்ட ஹலால் சான்றளிக்கப்பட்ட தயாரிப்புகளை சந்தைக்கு வழங்க வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

. இந்த தயாரிப்புகள் 2022 இல் ஏற்றுமதி வருமானத்தில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் எனும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன. இது, இலங்கையின் மொத்த உணவு மற்றும் பானங்கள் ஏற்றுமதியில் 60% ஆகவும் நாட்டின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 13% ஆகவும் அமைகிறது. உலகளாவிய ஹலால் சந்தையானது 2 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், இலங்கையின் வளர்ச்சி தொடர்பான மூலோபாயத்தை சரியான முறையில் சீரமைப்பதன் மூலமும், ஏற்றுமதியாளர்கள் முழுத் திறனையும் அடைவதை வலுவூட்டும் முயற்சிகளில் HAC தொடர்ச்சியாக இணைந்து செயற்படும்.

Related posts

இனி இந்தியாவிற்கு எளிதாக விமானத்தில் பறக்கலாம்!

நீர் விநியோக பணிகள் ஆரம்பம்

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் திறப்பு