உள்நாடு

இலங்கை விமானப்படைக்கு புதிய பதவி நிலை பிரதானி நியமனம்

இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக எயார் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

தற்போது விமானப்படை நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் நாயகமாகப் பணியாற்றும் ஏர் வைஸ் மார்ஷல் லசித சுமனவீர, 1991 ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையில் இணைந்தார்.

இலங்கை விமானப்படையின் புதிய பதவி நிலை பிரதானியாக பணியாற்றிய ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன நேற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

வலப்பனை’யில் சிறியளவிலான நில அதிர்வு

சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் அறிவித்தல்