மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா கலீல் பெப்ரவரி 18 முதல் 21 வரையில் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இவ்விஜயத்தின் போது, மாலைத்தீவுகளின் வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பிரதமர் பேராசிரியர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தமாக சந்திக்கவுள்ளார்.