உள்நாடுவணிகம்

இலங்கை வருகிறார் எலான் மஸ்க்!

எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் இந்த வருட இறுதியில் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதை அடுத்து, ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணைய சேவையை ஆரம்பிப்பதற்கு வசதியாக புதிய விதிமுறைகளை இலங்கை உருவாக்கவுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத்  தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் உடன் இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்தோனிசியாவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அத்துடன், அவரை இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை அவரும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஏற்கனவே இலங்கையில் ஸ்டார்லிங்கை (Starlink) அறிமுகப்படுத்துவதற்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் விண்ணப்பம் அனுப்பப்பட்டது. இதன் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் தற்போது புதிய விதிமுறைகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Related posts

அனுமதிப் பத்திரம் அற்ற ஆயுதங்களை ஒப்படைப்பதற்கு காலக்கெடு

COPE குழுவின் அறிக்கை சமர்ப்பிப்பு

இலங்கை மத்திய வங்கி வௌியிட்டுள்ள விசேட அறிக்கை

editor