உள்நாடு

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக தங்கத்தின் விலை உச்சம் தொட்டது

(UTV | கொழும்பு) – இலங்கை வரலாற்றில் முதன் முறையாக உள்ளூர் சந்தையில் தங்கத்தின் விலை 150,000 ரூபாயைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரிவிக்கின்றனர்.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 150,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 139,000 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள போர் தங்கத்தின் விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக உள்ளது.

மேலும், இலங்கை சந்தையில் தங்கத்தின் அளவு வேகமாக குறைந்து வருவதாகவும் சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்து – 19 வயது இளைஞர் பலி

நாட்டில் மேலும் 38 கொரோனா மரணங்கள்

கடன் தரப்படுத்தலில் இலங்கையை மேலும் தாழ்த்திய மூடிஸ் நிறுவனம்