இந்திய கடற்படைக் கப்பலான குதார், மூன்று நாள் பயணமாக நேற்று (03) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.
கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றனர்.
இந்த கப்பலின் கட்டளை அதிகாரி கமாண்டர் நிதின் சர்மா மற்றும் இலங்கைக் கடற்படையின் மேற்கு கடல் தளபதி ரியர் அட்மிரல் எம்.எச்.சி.ஜே. சில்வா ஆகியாருக்கிடையில் சந்திப்பு இடம்பெற்றது.
இந்த கப்பல் வருகையின் ஒரு பகுதியாக இலங்கை கடலோர காவல்படையின் சுரக்ஷா கப்பலுக்கு முக்கிய பாதுகாப்பு அமைப்பின் அத்தியாவசிய அங்கமான தீயணைப்பு அமைப்பின் நிரப்பப்பட்ட சிலிண்டர் கையளிக்கப்பட்டது.
எஸ்.எல்.சி.ஜி.எஸ் சுரக்ஷா கப்பலானது கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்திய அரசாங்கத்தால் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட ஒரு கடல் ரோந்துக் கப்பலாகும்.
முன்னதாக ஜூன் 2021 மற்றும் ஏப்ரல் 2022 இல் இந்தியா சுரக்ஷா கப்பலுக்கான உதிரி பாகங்களை நன்கொடையாக வழங்கியது.
ஜனவரி 2024 இல் ஹாலோன் சிலிண்டர்களை மீண்டும் நிரப்புவதற்கான உதவியையும் வழங்கியது.
இந்த செயற்பாடானது, பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை எதிர்கொள்ளும் திறனை வளர்ப்பதற்கு ஆதரவளிப்பதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை இது அடையாளப்படுத்துகிறது.
இக்கப்பலின் செயல்பாட்டுத் திறன்கள் குறித்து இலங்கை கடற்படை வீரர்களுக்குக் கற்பிக்கும் ஒரு நிகழ்ச்சியும் கப்பலில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த கப்பல் இலங்கை கடற்படையுடன் விளையாட்டு போட்டிகள் மற்றும் யோகா பயிற்சியையும் மேற்கொள்ளவுள்ளது.
பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பின் பகிரப்பட்ட சவால்களை திறம்பட எதிர்கொள்வதற்காக இலங்கை கடற்படையின் திறன்களை அதிகரிப்பதில் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, இந்திய கடற்படைக் கப்பலான குதரின் அமைந்துள்ளது.
நாளை மறுதினம் (06) இக்கப்பல் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்படவுள்ளது.