சூடான செய்திகள் 1வணிகம்

இலங்கை வங்கியின் 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் விண்ணப்பம் கோரபட்டுள்ளன

(UTV|COLOMBO)-2018ம் ஆண்டு 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கையில் அதி சிறந்த முறையில்  சித்தியடைந்த பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இலங்கை வங்கியின் ரண் கேகுளு கணக்குகளை உள்ள பிள்ளைகளுக்கு 15 000 ரூபா வீதம் 2000 புலமைப்பரிசில்கள் மற்றும் தனிப்பட்ட வெளிநாட்டு பணத்தில் இயங்கும் கணக்குடைய பிள்ளைகளுக்கு 25 000 ரூபா வீதம் 100 புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

மாவட்ட வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்றுக்கொண்ட  ரண் கேகுளு  கணக்குடைய அனைத்து பிள்ளைகளுக்கும் இலங்கை வங்கியிடமிருந்து பெறுமதியான விசேட பரிசுகள் வழங்கப்படவுள்ளன.

குறித்த புலமைப்பரிசில்களுக்கான விண்ணப்பங்களை BOC இணையதளத்தில் , பேஸ்புக் பக்கத்தில்,  பத்திரிகைகளில் அல்லது அருகில் உள்ள இலங்கை வங்கி கிளையில் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்களை நவம்பர் மாதம் 27ம் திகதிக்கு முன்னதாக இலங்கை வங்கி கிளையில்  கையளிக்க வேண்டும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டில் சீரற்ற காலநிலை; பொது மக்களுக்கு எச்சரிக்கை

பொய் கூறியுள்ளேன்- ஒப்புக்கொண்ட ஹிஜாஸுக்கு எதிரான சாட்சியாளர்

இடியுடன் கூடிய மழை