உள்நாடு

இலங்கை ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம்!

(UTV | கொழும்பு) –

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. புதிய உலகளாவிய நிதிய ஒப்பந்தத்திற்காக நடத்தப்படும் உலக தலைவர்கள் உச்சி மாநாட்டின் உயர்மட்ட குழு விவாதத்தில் உரையாற்றுவதற்காக பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரான்ஸ் சென்றுள்ளார். இதன் பின்னர் பிரித்தானியாவுக்கும் பணயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான பிரித்தானியாவில் எதிர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில்  intercontinental park lane hotel இல் இலங்கை ஜனாதிபதி ரணில் தங்கியிருந்துள்ளார்.

இதனை அறிந்த பிரித்தானியாவை சேர்ந்த தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர்.

இதன்போது சுமார் 25 பொலிஸார் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களை சந்தித்து, அவர்கள் போராட்டத்திற்கு பயன்படுத்திய தமிழீழ தேசியக் கொடி தடை செய்யபட்டது என கூறியதாகவும் அதற்கு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இது தடை செய்யப்பட்ட கொடியல்ல எனவும் இது தமிழர்களின் கொடி எனவும் தெரிவித்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இன்றும் மூன்று மணி நேர மின்வெட்டு

நாட்டில் ஆடைக் கைத்தொழிற்சாலைகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி!

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 889 ஆக உயர்வு [UPDATE]