கிசு கிசு

‘இலங்கை முற்றிலும் திவாலாகி விட்டது’

(UTV | கொழும்பு) – நேற்று (15) இலங்கையை முற்றாக திவாலான நாடாக சர்வதேச கடன் தர மதிப்பீட்டு நிறுவனமான ஸ்டாண்டர்ட் அண்ட் புவர்ஸ் (Standard & Poor’s) அறிவித்துள்ளது.

சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் உட்பட வெளிநாட்டு வர்த்தகக் கடனை செலுத்துவதை முழுமையாக நிறுத்தியதன் அடிப்படையில் இந்த நிலைமை அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட மத்திய வங்கியின் நிதிச் சபை, கடனைத் திருப்பிச் செலுத்துவதை இடைநிறுத்துவதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது.

குறிப்பாக வணிகக் கடன்களை வட்டியுடன் திருப்பிச் செலுத்த வேண்டியிருந்ததால் இலங்கையின் அந்நியச் செலாவணியில் கடும் நெருக்கடி ஏற்பட்டது. அத்தியாவசிய மருந்துகள், உணவு மற்றும் எரிபொருளை கூட இறக்குமதி செய்ய முடியாத சூழ்நிலையில் வெளிநாட்டு வர்த்தக கடன்களை திருப்பிச் செலுத்துவது இடைநிறுத்தப்பட்டது.

Related posts

பழகின செறுப்பு காலை கடிக்காதாம் – பிள்ளையான் கொழும்பிற்கு

கருவுக்கும் மங்களவுக்கும் அதிஷ்டம்

முடக்க நிலை தளர்த்தப்படுவதில் கேள்விக்குறி