சூடான செய்திகள் 1

இலங்கை மின்சார முச்சக்கர வண்டிகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யத்திட்டம்

(UTV|COLOMBO)-2020ம் ஆண்டின் நடுப்பகுதியளவில் நாட்டில் தயாரிக்கப்படும் மின்சார முச்சக்கர வண்டிகளை சந்தையில் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

நேற்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற மின்சார முச்சக்கர வாகன அறிமுகம் நிகழ்ச்சியில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர இவ்வாறு தெரிவித்தர்.

இலங்கைக்கான ஜப்பான் உயர்ஸ்தானிகர்Japanese Ambassador Kenichi Suganuma கலந்துகொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் மேலும் உரையாற்றுகையில் இவற்றை ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. புதிய கொள்கையின் கீழ் இந்தத் தொழிற்சாலை அமைக்கப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முச்சக்கர வண்டிகள் விசேட பங்களிப்பை வழங்கும். அதனால், இந்த தொழில்துறையில் ஈடுபட்டுள்ளவர்களை வலுவூட்டுவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். குறிப்பாக சுற்றுலாத் துறைக்கான முறையான வேலைத்திட்டத்தின் கீழ் முச்சக்கர வண்டிகளைப் பயன்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

கபூரியா அரபுக் கல்லூரி நிருவாகத்தினரால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

வசந்த கரன்னாகொட – ரொஷான் குணதிலக ஆகியோரது பதவி நிலைகளில் உயர்வு

சஜித் ஆணைக்குழுவில் முன்னிலையாக மாட்டார்