உள்நாடு

இலங்கை மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

(UTV | கொழும்பு) –

தற்போது பயன்பாட்டிலுள்ள மின்சார பட்டியலுக்கு பதிலாக இலத்திரனியல் மின்சார பட்டியலை இலங்கை மின்சார சபை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இலத்திரனியல் மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ள பதிவு செய்துகொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. இலத்திரனியல் மின்சார பட்டியலை பெற்றுக்கொள்வதற்காக ebil.ceb.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து பதிவு செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அல்லது REG <இடைவெளி> மின்சார கணக்கு இலக்கத்தை டைப் செய்து 1987 என்ற இலக்கத்திற்கு குறுந்தகவல் (SMS) அனுப்புவதன் ஊடாக இலத்திரனியல் மின்சார கட்டண பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். இந்த சேவை தெஹிவளை, களனி, ஸ்ரீஜயவர்தனபுர, மாத்தறை மற்றும் அம்பலங்கொட ஆகிய பகுதிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதுடன், நாடு தழுவிய ரீதியில் விரைவில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த சேவை குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்ள 0714247777 என்ற இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாதுகாப்பு சட்டமூலத்தை உடனடியாக திரும்பப் பெறு – இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்.

பிரேமலால் ரீட் மனு தீர்ப்பு திங்களன்று [UPDATE]

தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக ரயில் சேவைகள் இரத்து