உள்நாடு

இலங்கை மின்சார சபை பேச்சாளர் நொயல் பிரியந்தவின் கருத்தை வன்மையாக கண்டிக்கிறோம் – இரா.ஜீவன் இராஜேந்திரன்

(UTV | கொழும்பு) –

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

கடந்த 200 வருடங்களாக இந்த நாட்டை பொருளாதார ரீதியாக தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கின்ற மலையக பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கத்தை 2.00 மணிக்கு பின் குடித்து கும்மாளமடிக்கும் சமூகமாக சித்தரித்து நாட்டின் உயர் அதிகாரி ஒருவர் இழிவுப்படுத்திருப்பது வெட்கக்கேடான விடயமாகும் இவ்வாறு இலங்கை மின்சார சபை பேச்சாளர் நோயல் பிரியந்த என்பவருக்கு எதிராக வெள்ளிக்கிழமை (23-02-2025) பி.பகல் 3.00 மணிக்கு அட்டன் அம்பிகா சந்தியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் பொதுச்செயலாளர் இரா.ஜீவன் இராஜேந்திரன் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் மலையக பெருந்தோட்ட உழைப்பாளர்கள் ஆளாளுக்கு உதைத்து விளையாடுவதற்கு கால்பந்து அல்ல அவர்கள் இந்த நாட்டுக்கு 80% மான அந்நிய செலாவணியை ஈட்டித் தருவர்கள் அவர்களின் உழைப்பு தான் நாட்டில் இலவச கல்வி இலவச மருத்துவம் என பல சமூகநலத்திட்டங்களுக்கு பங்களிப்புசெய்கின்றன அதையெல்லாம் மறந்து ஒட்டுமொத்த பெருந் தோட்டத் தொழிலாளர்களையும் குடிகாரர்களாக சித்தரித்திருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது நோயல் பிரிந்த அவர்கள் எந்த அடிப்படையில் இந்த கருத்தை முன்வைத்தார் என்பது தெரியவில்லை மக்கள் இன்று மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்குகூட முடியாத நிலையிலுள்ளபோது அவர்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பாக சிந்திக்காது அதை திசைதிருப்ப ஒரு சமூகத்தை இழிவுப்படுத்த முனைந்துள்ளார் .இது மிகவும் பாரதூரமான கருத்தாகும் அவர் பதவி விழகுவதும் மன்னிப்பு கேட்பதும் மட்டும் அந்தமக்களுக்கு ஏற்பட்ட மனக்குமுரல்களை தணித்து விடாது இனியும் இதுபோன்ற இழிவான கருத்துக்கள் வெளிவராமல் இருப்பதற்கு இறுக்கமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவேண்டும். மேலும் மக்களுக்கு அநீதி ஏற்படும்போது உடனடியாக மக்கள் பிரதிநிதிகள் அவற்றை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும்.
பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தங்களுக்காக மட்டுமல்ல இந்த நாட்டுக்காகவும் உழைத்துக்கொண்டு15 இலட்சம் மலையகத்தமிழர்களின் பாதுகாப்பு அரணாகவும் இருக்கின்றனர் அவர்களுக்கு ஒரு பிரச்சினை ஏற்படும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நாம் உழைப்பதற்கான அரசியல் சமூக செயற்பாட்டாளர்கள் அல்லது உணர்வுடன் அவர்களுக்காக களத்தில் நிற்போம் என்றார்.

Related posts

இரண்டு மாதங்களுக்கு தேவையான மருந்துகளே கையிருப்பில்

முச்சக்கரவண்டி, மோட்டார்சைக்கிள் சாரதிகளுக்கான அறிவித்தல்

ஒரு தொகை கேரள கஞ்சா மீட்பு