உள்நாடு

இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் செயற்பாடு இறுதிக் கட்டத்தில்

(UTV|கொழும்பு)- வௌிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்துவரும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

நாளை மறுதினம்(11) பிலிப்பைன்ஸில் இருந்து 250 பேரை அழைத்து வருவதாக ஜனாதிபதியின் வௌிநாட்டு தொடர்புகளுக்கான மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெலாரஸில் தற்போது கற்றல் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ள 250 மாணவர்கள் அடுத்த மாதமளவில் நாடு திரும்பவுள்ளதாகவும் அட்மிரல் ஜயநாத் கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.

வௌிநாடுகளுக்கு தொழிலுக்கு சென்றுள்ள பணியாளர்கள் உள்ளிட்ட 25,000 இலங்கையர்கள் நாடு திரும்பும் எதிர்பார்ப்பில் உள்ளதாகவும், இவர்களையும் விரைவில் நாட்டிற்கு திருப்பி அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் தெரிவித்தார்.

Related posts

இன்று முதற்தடவையாக கூடவுள்ள கோப் குழு

அனைத்து இனங்கள் – மதங்கள் சமமாக கருதப்படும்

உலகக்கிண்ண தோல்வி குறித்து குசல் தெரிவித்த கருத்து!