வணிகம்

இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு

(UTV|கொழும்பு)- கடன் அட்டைகளுக்கான அதிகபட்ச வட்டியை 18 வீதமாக குறைப்பதற்கு இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை தீர்மானித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் நிதிச்சபை நேற்று (19) கூடிய போது தற்போதைய கொள்கை வட்டி வீதத்தை மாற்றமின்றி பேணுவதற்குத் தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, நிலையான வைப்புக்கான வட்டி 4.5 வீதமாகவும் நிலையான சலுகை கடன் வட்டி வீதம் 5.5 வீதமாகவும் காணப்படுகின்றது.

சட்டரீதியான இருப்பு வீதம் 2 வீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

Related posts

இந்தியாவிடம் கடனுதவி கேட்கும் இலங்கை

பொம்மலாட்டக் கலை உலக மரபுரிமைச் சொத்துக்களின் பட்டியலில்

தேசிய சுற்றாடல் வாரம்