உள்நாடு

இலங்கை பைடனுடன் இணைந்து பணியாற்ற தயார்

(UTV | கொழும்பு) – அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜோ பைடன் மற்றும் உப ஜனாதிபதியான கமலா தேவி ஹாரிஸ்க்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்குகளின் ஊடாக இந்த வாழ்த்துக்களை குறிப்பிட்டுள்ளனர்.

இதன்மூலம் இருநாடுகளுக்கும் இடையில் உள்ள இராஜதந்திர உறவானது மேலும் வலுப்பெறும் என தாம் எதிர்ப்பார்ப்பதாகவும் அவர்கள் தமது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனும் அமெரிக்காவின் 46வது புதிய ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தனது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

அமரர் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது

மைத்திரிக்கும் ரணிலுக்கும் மீளவும் அழைப்பு

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு [UPDATE]