விளையாட்டு

இலங்கை – பங்களாதேஷ் டெஸ்ட் கிரிக்கெட் ஒக்டோபரில் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடர் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இத் தொடரில் விளையாடவுள்ள பங்களாதேஷ் கிரிக்கெட் அணியினரும், பங்களாதேஷ் கிரிக்கெட் சபை உறுப்பினர்களும் செப்டெம்பர் 23 அல்லது 24 ஆம் திகதியன்று இலங்கை வருவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றன.

நாட்டுக்கு வருகை தரும் பி.சி.பி. உறுப்பினர்களும், வீரர்களும் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தலில் வைக்கப்படவுள்ளதுடன், இதற்காக ஹோட்டல்களில் ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகள் அடங்கும் என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கிரிக்கெட் செயல்பாட்டுத் தலைவர் அக்ரம் கான் உறுதிப்படுத்தியுள்ளார்.

Related posts

தேசிய மெய்வல்லுனர் போட்டி; பாசில் உடையாருக்கு பதக்கம்

சம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டி – இலங்கை அணிக்கான பயிற்சிப் போட்டி இன்று

Dad’s Army கிண்டலுக்கு பிராவோ பதிலடி