உள்நாடு

“இலங்கை தொடர்பிலான IMF அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவும்”

(UTV | கொழும்பு) – இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, நிதி அமைச்சும் மத்திய வங்கியும் வெளிநாட்டு கையிருப்பு தொடர்பான தரவுகள் உட்பட அரச நிதி தொடர்பான அனைத்து உண்மைகளையும் முன்வைக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த விவரங்களின் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்தி, நிலவும் நிதி நெருக்கடிக்கு தீர்வு காண முடியும் என்று முன்னாள் பிரதமர் குறிப்பிட்டிருந்தார்.

நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு சர்வகட்சி மாநாடு நடத்தப்படுமாயின் அரசாங்கத்தின் நிதி தொடர்பான விபரங்கள் அவர்களிடம் இருக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பான சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையை கட்சித் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வர்த்தக சங்கங்கள் அணுக முடியும் என முன்னாள் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்த சபைத் தலைவர் அமைச்சர் தினேஸ் குணவர்தன, அரசாங்கம் விரைவில் அறிக்கையை கட்சித் தலைவர்களுக்கு வழங்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை, இலங்கையுடன் நான்காம் பிரிவின் ஆலோசனையை பெப்ரவரி 25ஆம் திகதி நிறைவு செய்தது. இந்த அறிக்கை பாரம்பரியமாக நிதியமைச்சர் மற்றும் மத்திய வங்கியிடம் கையளிக்கப்படுகிறதாக தெரிவித்திருந்தார்.

Related posts

பல அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு

மீண்டும் பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான அறிவிப்பு

மண்சரிவில் சிக்கி மூன்று பேர் மாயம்