விளையாட்டு

இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணி

(UTV|COLOMBO)-தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் முதல் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட உள்ளது.

முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையும், 2 வது டெஸ்ட் போட்டி ஜூலை 20 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி போட்டி ஒன்றும் நடைபெறவுள்ளது.

இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஓராண்டு ஓய்வில் இருந்து இந்தியா தொடருக்கு திரும்பிய ஸ்டெயின், முதல் டெஸ்டில் குதிக்காலில் ஏற்பட்ட காயத்தால் 2 வது இன்னிங்சில் இருந்து விலகினார். தற்போது காயம் குணமடைந்ததால் இலங்கைக்கு எதிரான தொடரில் அவர் இடம்பிடித்துள்ளார்.

காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரபாடாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுள்ளதால் டி ப்ருயின், கிளாசன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

டெஸ்ட் தரவரிசையில் முதல் இருபதுக்குள் இருவர்

குமார் சங்ககாரவிற்கு கிடைத்துள்ள கௌரவம்

அணியில் மீள இணைக்கப்பட்டுள்ள வோனர் மற்றும் ஸ்மித்