வணிகம்

இலங்கை தேயிலைக்கு ரஷ்யா சந்தையில் தடை

(UTV|COLOMBO)-இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யும் தேயிலை உட்பட அனைத்து கைத்தொழில் உற்பத்திகளுக்கும் தற்காலிக தடை விதிக்க ரஷ்யா தீர்மானித்துள்ளது.

ரஷ்ய கைத்தொழில் பாதுகாப்பு அதிகார சபை இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தத் தடையானது எதிர்வரும் 18 ஆம் திகதிமுதல், அமுலுக்கு வரவுள்ளதாகவும் அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் தேயிலையில், 23 வீதத்தை ரஷ்யா இறக்குமதி செய்கிறது.
இந்த நிலையில், இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் தேயிலையில், ஒருவகை வண்டு இனம் இனங்காணப்பட்டமையே இந்தத் தடைக்கான காரணம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும், இலங்கையிலிருந்து மீண்டும் தேயிலையை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குமாறு ரஷ்யாவின் தேயிலை உற்பத்தி சம்மேளனம், அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரசபையிடம் கோரிக்கை விடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், இலங்கை தேயிலை சபை ஆணையாளரிடம் எமது செய்திச் சேவை வினவியது.
அதற்குப் பதிலளித்த அவர், இது குறித்து ஆராய்ந்து பதிலளிப்பதாக  தெரிவித்தார்.
இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் கடந்த 10 மாத காலப்பகுதியில், இலங்கையிலிருந்து 41 ஆயிரத்து 300 லட்சம் தொன் தேயிலையை ரஷ்யா இறக்குமதி செய்துள்ளது.
இதனூடாக, இலங்கைக்கு 436 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

உலக சந்தையில் சரிந்தது தங்கம்

இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!!

குரக்கனில் தயாரிக்கப்பட்ட சமபோஷ நியுட்ரி ப்ளஸ் சந்தையில் அறிமுகம்