விளையாட்டு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணிக்கு நவீட் நவாஸ் நியமனம்

(UTV | கொழும்பு) – இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் உதவிப் பயிற்றுவிப்பாளராக இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் வீரர் நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் பங்களாதேஷ் தொடருக்காக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதேபோல், வேகபந்து பயிற்சியாளராக இலங்கை அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சமிந்த வாஸும், சுழற்பந்து பயிற்சியாளராக பியல் விஜேதுங்கவும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும், களத்தடுப்பு மற்றும் துணை பயிற்சியாளராக முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் மனோஜ் அபேவிக்கிரம நயமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related posts

ஆசிய கிண்ணத்தை வென்றுள்ள இலங்கை வலைப்பந்து அணிக்கு ஜனாதிபதி பாராட்டு

இலங்கை லெஜன்ட்ஸ் அணியை வீழ்த்தியது இந்தியா

ஐபிஎல் ஏலத்தில் 590 வீரர்கள் பங்கேற்பு