உள்நாடுவிளையாட்டு

தேசிய ஒலிம்பிக் குழுவுக்கான நிதி உதவி இடைநிறுத்தம்

இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு சர்வதேச ஒலிம்பிக் குழு மற்றும் ஆசிய ஒலிம்பிக் பேரவை ஆகியவை வழங்கும் நிதி உதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், ஒலிம்பிக் வீரர்களுக்கான புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் தொடர்ந்து வீரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும் என சர்வதேச ஒலிம்பிக் குழுவானது இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவுக்கு மின்னஞ்சல் மூலம் அறிவித்துள்ளது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் விசேட பொதுக்கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை (13) நடைபெற்ற போது, தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலை விரைவாக நடத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டது.

தேசிய ஒலிம்பிக் குழுவின் தற்போதைய பதவிக்காலம் 2026ஆம் ஆண்டு ஏப்ரலுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பம்

கைது செய்யப்பட்ட உப பொலிஸ் பரிசோதகர் பணி நீக்கம்

விஜயதாச ராஜபக்சவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்க நடவடிக்கை!