உள்நாடு

இலங்கை தயார் எனில் IMF தயார்

(UTV | கொழும்பு) – டொலர் பற்றாக்குறையினாலேயே எண்ணெய்க்கான நெருக்கடி ஏற்பட்டுள்ளது. கடன் பிரச்சினைகளால் டொலர் பற்றாக்குறை அதிகரித்துள்ளது.

இதேவேளை, அரசாங்கம் நிதி உதவி கோரினால், இலங்கையுடன் மாற்று பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு தயாராகவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், இலங்கை அரசாங்கம் இதுவரை நிதியுதவி கோரவில்லை என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான தூதுக்குழுவின் தலைவர் மசாஹிரோ நொசாகி, AFP செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்திடம் ஆலோசனை பெற இலங்கை தயாராக இருப்பதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ அண்மையில் தெரிவித்திருந்தார்.

எனினும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த விடயம் குறித்து வேறு விதமாக கருத்து தெரிவித்திருந்தார்.

நிதியமைச்சின் புதிய பொருளாதாரப் பிரிவின் பொருளாதார திறனைக் கட்டியெழுப்புவதற்குத் தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்பை வழங்கும் பொதுவான செயற்பாடு அதுவென மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார்.

Related posts

கிராம உத்தியோகத்தர்களை JPகளாக்க வர்த்தமானி!

அரச ஊழியர்களின் சேவைக்கான அங்கீகாரத்தை வழங்குவோம் – சஜித்

editor

வெளிநாட்டுக்குச் செல்லும், இலங்கைகளுக்கு விடுக்கப்படும் முக்கிய எச்சரிக்கை!