அரசியல்உள்நாடு

இலங்கை தமிழ் அரசு கட்சி வவுனியாவில் கட்டுப்பணம் செலுத்தியது!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில்
வவுனியா மாநகர சபை உட்பட நான்கு சபைகளிலும் போட்டியிட இலங்கை தமிழ் அரசு கட்சி இன்று (14) வவுனியா மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலகத்தில் கட்டுப்பணம் செலுத்தியது.

அதற்கமைய, வவுனியா மாவட்டத்தின் வவுனியா மாநகர சபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பு சங்கு சின்னத்தில் போட்டியிடவுள்ளது.

கட்டுப்பணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் உள்ளடங்கிய கட்சி முக்கியஸ்தர்கள் செலுத்தியிருந்தனர்.

Related posts

கல்முனை சிரேஷ்ட உடற்கல்வி ஆசிரியர் றிஸ்மி மஜீத் வெள்ளி, வெண்கலம் வென்றார்.

நரேந்திர மோடியை சந்திக்க இந்தியா செல்லும் ஜனாதிபதி அநுர

editor

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியீடு