வணிகம்

இலங்கை – சென்னைக்கான விமான சேவைகள் விரைவில்

(UTV | கொழும்பு) –  இலங்கை மற்றும் சென்னைக்கான விமான சேவைகளை யாழ். சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இன்னும் சில மாதங்களில் விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் மாலைதீவை இணைத்து தென்னிந்தியாவுக்கான விமான சேவைகளை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில விமான சேவை நிறுவனங்கள் ஏற்கனவே இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

யாழ். சர்வதேச விமான நிலையம் மூன்று கட்டங்களாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக அமைச்சர் கூறினார்.

ஆயிரம் பயணிகளை கையாளும் வகையில் விமான நிலைய முனையம் நிர்மாணிஙக்கப்படவுள்ளதுடன் பாரிய விமானங்களை தரையிறக்கும் வகையில் ஓடுபாதை விஸ்தரிக்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

அத்தியாவசிய பொருட்களில் தட்டுப்பாடு இல்லை

கொழும்பு பங்குச் சந்தை நாளை திறப்பு குறித்த அறிவிப்பு

2020 ஜனவரியில் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள vivo S1 Pro