உள்நாடு

இலங்கை சந்தைகளை ஆக்கிரமித்துள்ள தமிழக அரிசி

(UTV | கொழும்பு) – நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்தியாவின் தமிழக மாநில அரிசி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட அரிசி வகைகள் இவ்வாறு நாட்டின் பல்வேறு இடங்களிலும் விற்பனை செய்யப்படுகின்றது.

தமிழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் உள்நாட்டு அரிசி விலைகளை விடவும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் மக்கள் தமிழக அரிசி வகைகளை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இரசாயன உரப் பயன்பாட்டுக்கு அரசாங்கம் விதித்த தடை காரணமாக இம்முறை நெல் விளைச்சலில் வீழ்ச்சியை அவதானிக்க முடிவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாக உள்நாட்டு அரிசி வகைகளின் விலைகள் அதிகரித்துள்ளன.

இவ்வாறான பின்னணியில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள தமிழக அரிசி வகைகள் இயற்கை உரத்தை கொண்டு உற்பத்தி செய்யப்பட்டவையா என்பது பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடவில்லை.

Related posts

இலங்கை மின்சார சபைக்கு 6 புதிய புதுப்பிக்கத்தக்க திட்டங்கள்!

காணாமல் ஆக்கப்பட்டோர் பிரச்சினைக்கு என்னிடம் பதில் உள்ளது – நாமல்

editor

மேலும் 4 கடற்படையினர் பூரண குணம்