உள்நாடு

இலங்கை குழு ஜெனிவா விஜயம்

(UTV | கொழும்பு) –   ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது அமர்வில் பங்கேற்பதற்காக அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு இன்று ஜெனிவா பயணமாகவுள்ளது.

இதன்படி, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, நிதி அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் குறித்த குழுவில் உள்ளடங்குதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 51 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 7 ஆம் திகதி வரை ஜெனிவாவில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Related posts

திசைகாட்டிக்கு வாக்களித்த பெரும்பாலானோர் விரக்தியில் – திலித் ஜயவீர எம்.பி

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியல் குறித்து பாதுகாப்பு அமைச்சின் அறிவித்தல்