கிசு கிசு

இலங்கை கிரிக்கெட் அணியின் படுதோல்விக்கு அமைச்சர் பைஸர் முஸ்தபாவே பொறுப்பு?

(UTV|COLOMBO)-இலங்கை கிரிக்கெட் அணி ஆசியக் கிண்ணப் போட்டியின் முதல் சுற்றிலேயே வெளியேறுவதற்கும் இப்போட்டியில் இலங்கை அணி முகம்கொடுத்த படுதோல்விகளுக்கும் உரிய பொறுப்பை விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவே ஏற்றுக் கொள்ள வேண்டும் என 16 பேர் கொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பீ. திஸாநாயக்க தெரிவித்தார்.

விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா 63 விளையாட்டுக்களில் எந்தவொரு விளையாட்டிலும் கலந்துகொண்டதாக நாம் கேள்விப்பட்டதில்லை. அவர் வேண்டுமென்றுதான் கிரிக்கெட் விளையாட்டுச் சங்கத்தின் தெரிவை ஒத்திவைத்து வருகின்றார்.

பொய்யான காரணங்களை வைத்தே இந்த தெரிவுக் குழுவுக்கான தேர்தலை தள்ளிப் போட்டு வருகின்றார். அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு ஒரு தடவையல்ல, இரு தடவைகள் இந்த தேர்தலை நடாத்துமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்திருந்ததை நாம் அறிவோம் எனவும் எஸ்.பீ. திஸாநாயக்க எம்.பி. மேலும் கூறினார்.

நேற்று  (20) பொரல்லையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

காதலர்களுக்கு காவலாக பொலிஸார்?

பிரபல சர்ச்சை நடிகை பாகிஸ்தான் கொடியுடன் கொடுத்த போஸ் உள்ளே…

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தினை கலைக்க இன்று புதிய அணுகுமுறை?